அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே..
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே....

ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...

ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்...
விழியோடு இமைபோல விலகாத நிலை வேண்டும்...
இணையான இளமானே துணையான இளமானே....

காற்றுக்கு பூக்கள் சொந்தம்...

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தகாரி வருவாளா...
என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லி தருவாளா...

பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லாங்குழலாய் மாற வேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வாரம் கொடுக்கும்
நல்ல வரம் கொடுக்கும் ...
மீனா மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கணும்
காற்றா மரமா பூவ நானும் வாழ்த்திடனும்
ஒருத்தி துணைவேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சி செஞ்சி
நானும் வைக்கிறேன்
சாமி ஒண்ணு கண்ணா முழிச்சி பாத்திடும்மா
அவள காட்டிடுமா....


மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதிலே
சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீயும் கேட்காதே
எனக்கே தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவியா
விண்மீன் அதிலே வீடு கட்டனும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கே தெரியாதே
மரமே மரமே கிளையை தருவிய
கிளையில் கிளிக்கு உஞ்சல் கட்டனும்
யாரு தந்த கிளிதான் என்று கேக்காதே
நேசமா தெரியாதே .....

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிகை எடுத்து முகத்தை துடைத்து விடவா
இந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோடு சேரத்தான் இந்த உயிரை தாங்கினேன்

கண்ணோடு கண்ணும் உன் நெஞ்சோடு நெஞ்சும் வைத்து
பழகும் போது இடையில் ஏது வார்த்தை
தொலைதூரம் நீயும் தொடமுடியாமல் நானும்
நின்று தவிக்கும் போது இனிக்கவில்லை வாழ்க்கை

ஏன் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேக்குதா
நான் துவும் பூவினை உன் நெஞ்சில் பூக்குதா

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே ஒரு பூ சுடவா

பாக்காதே என்ன பாக்காதே...

பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நீ கேட்க காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக்கொள்ள நடப்பது கூத்தும் இல்ல

வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீ தானே என்னை இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீ தானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த எ மனச
நாராக கிழிச்சு புட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலராக மாத்தி புட்ட

என்னுடம் நடத்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ளே இருந்த என் உசுர
வெளியே மிதக்க விட்ட

வேணான் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
காணும் காணூனு நீ தேட காதல் ஒன்னும் தொலையலே
ஒன்ன இருந்த நியபகத்தை நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனிய இருக்கும் வலிய மட்டும் தனிய அனுபவிச்சேன்

பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிககும் ....

பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நான் கேக்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ள தானே நானிருக்கேன் உன்னக்கது புரியலையே...

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இறுக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி...
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்...
கையோடுதான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்...
வேறென்ன வேண்டும் உலகத்திலே...
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே ...
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்.
உன் சீண்டலில் என் தேகத்தில்
புது ஜென்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்.
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

தூங்காத விழிகள் இரண்டு ...

தூங்காத விழிகள் இரண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ...
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது ...

எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி ...

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே ...
நினைவென்னும் சோலைகுள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்கதடி ...

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலர்
நிலவளால் தங்கையென உன் ஜொலிப்பு சொல்லுடி வைர சிலையே ...

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுடி அம்மம்மா

பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்

வைகைபோல் நாணத்தில் நனைகின்றேனே
வைகை நீ என்றுன்னை சொல்கின்றேனே ...

பச்சை அரிசி எனும் பற்கள் கொண்ட உன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகுதடி உன் நினைப்பு ...

வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது ...

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது
மீனாட்சியை தேடுது ...
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்ட வில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்த்து
உனக்கேன் ஆசை ரதி அவள் மேலே ...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

மாதங்களை எண்ண பண்ணிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலும் ஒன்று கூட்ட ...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாண ...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...
வைகை இல்ல மதுரை இது... மீனாசியை தேடுது ...
எதெதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...



உலகிலே அழகி நீதான் ...

உலகிலே அழகி நீதான்
எனக்குதான் எனக்குதான் ...
உனக்கு நான் அழகான சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்...


கேளடி கண்மணி ...

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி...

கானல் நீரால் திராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி...

நான் போட்ட மலர்மாலை மனம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை ....

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமை தங்கி நீயல்லவா...
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னை தாலாட்டும் தாயால்லவா...

எதோ எதோ அனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது ...
கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது ...


நீ பாடினால் நல்லிசை...

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்...

நீ பாடினால் நல்லிசை, உன்
மௌனமும் மெல்லிசை ...

வாழ சொன்னால் வாழ்கிறேன் ...

கண்ணில் தெரியும் வண்ண பறவை
கையில் கிடைத்தால் வாழலாம் ...
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம் ...
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம் ...

வாழ சொன்னால் வாழ்கிறேன் ...
மனமா இல்லை வாழ்வினில்
ஆழ கடலில் தோணி போலே
அழைத்து சென்றால் வாழ்கிறேன் ...

என் கதை முடியும் நேரம் இது ...

என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது

அன்பினில் வாழும் உள்ளம் இது
அனையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது, அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது ...

பேதைமை நிறைந்தது என் வாழ்வு, அதில்
பேதையும் வரைந்தது சில கோடு
விட்டென்று சிரிப்பது உள் நினைவு, அதன்
விட்டொன்று போட்டது அவள் உறவு ...

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே, அதில்
பிரிவுகள் என்பதே இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு, அதன்
உருவாய் எரிவது என்மனது...

இரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த
அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...